அந்த குழந்தைக்கு அவர் அப்பா இல்ல.. 17 மாதம் ஜெயிலில் சிக்கியிருந்த நபர்..!

885

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியில் சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு, ஜுலை 23-ஆம் தேதி அன்று, வயிறு வலிப்பதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தபோது, பக்கத்து வீட்டை சேர்ந்த நபர், தன்னை 2 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அந்த நபரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

கடந்த 17 மாதங்களாக சிறையில் இருந்த நிலையில், தற்போது எடுக்கப்பட்டுள்ள டி.என்.ஏ பரிசோதனையில், சிறுமியின் குழந்தைக்கு அவர் தந்தை இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement