ஐ.எஸ். பயங்கரவாத தலைவன் கைது!

383

லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியில் இருந்து 450 கி.மீ. தொலைவில் சிர்ட்டே நகரம் உள்ளது.

இந்த நகரத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவரான காலிபா பாரக் பதுங்கி இருப்பதாக லிபியாவின் பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர்.

இதுபற்றி லிபியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது கைது செய்யப்பட்டுள்ள ஐ.எஸ். அமைப்பின் தலைவன் காலிபா மிக பயங்கரமான நபர் ஆவார்.

சிர்ட்டேயில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் அவரும் ஒருவர். அவர் அட்டார்னி ஜெனரலால் தேடப்பட்டு வந்தார். இந்த நிலையில் இவர் தற்போது கைது செய்யப்பட்டுவிட்டார் என குறிப்பிட்டார்.