ஒரு வாரத்தில் மட்டும் இத்தனையா..? பாத்து வண்டிய நிறுத்துங்க மக்களே

833

சென்னையில் நோ பார்க்கிங் பகுதியில் வாகனத்தை நிறுத்தியமைக்காக, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோத பார்க்கிங்குகளை தடுப்பதற்காக ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையிலான 300 சிறப்பு குழுவினர், பனகல் பார்க் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் நிறைந்த பகுதிகளில் கடந்த வாரம் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.அதில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 100 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 35 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு முறையான பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தரவும் அந்தந்த நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement