தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்க உத்தரவு

765

கர்நாடகாவை போன்று தமிழகத்திலும் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்குமாறு தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே பழமையான வேப்ப மரத்தை வெட்டுவதற்கு தடை விதிக்க கோரியும், கர்நாடகாவை போன்று தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது உடன்குடி வைத்தியலிங்கபுரத்தில் பழமையான வேப்ப மரத்தை வெட்ட நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும் கர்நாடகாவை போன்று தமிழகத்தில் மரங்கள் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பதில் அளிக்குமாறு, தமிழக சுற்றுசூழல் மற்றும் வனத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிட்டனர்.

Advertisement