தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் – வானிலை

895

தமிழகத்தில் வரும் நாட்களில் வெப்பநிலை படிப்படியாக உயரும் என்றும் தற்போதைய நிலையில் இருந்து 2அல்லது 3டிகிரி செல்சியஸ் உயரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 60கி.மீ வேகத்தில் கடல் காற்று வீசி வருவதால் அந்த பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் நாளை முதல் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

அதிகப்பட்சமாக 31 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என கூறியுள்ளது.