கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

393

அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த நிலுவை தொகை 7ஆயிரம் கோடியை உடனே விடுவிக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து போக்குவரத்து துறை செயலாளர் டேவிதார், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி இன்று கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவதற்காக பல்லவன்  இல்லம் முன் போக்குவரத்து தொழிலாளர்கள் கூடியுள்ளனர்.

இங்கிருந்து கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல விடாமல் போலீசார் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of