கஜா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பரவலாக கனமழை பெய்தது

284
Rain

கஜா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில் சென்னையில் பரவலாக கனமழை பெய்தது.

கஜா புயலால் சென்னைக்கு நேரடி பாதிப்பு இருக்காது என்றும், 4 நாட்களுக்கு மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்தது.

கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டு தாங்கல், வடபழனி, வளசரவாக்கம், போரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இதேபோன்று தாம்பரம், வண்டலூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.