3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.

1627

இன்காஸ் இன மக்கள் தான் முதல்முதலில் பெரு நாட்டில் 18,000 மைல் தூரத்திற்கு சாலைகளை அமைத்தனர்.

இன்கா இன மக்கள் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பே வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை குறிப்பாக skull surgeries என்று அழைக்கப்படும் மண்டை ஓடு அறுவை சிகிச்சைகளை செய்தனர்.

inca-skull

முதல்முதலில் பெரு நாட்டில் உருளைக்கிழங்குகளை அறிமுகம் செய்து அறுவடை செய்தது இந்த இன்கா இன மக்கள் தான்.

இன்கா இன மக்கள் தகவல் சேமிப்பு, கணக்கு இன்னும் சொல்ல போனால் ஒரு தனிவகை மொழி ஒன்றை கடைபிடித்தனர். “குய்பூ” எனப்படும் முடிச்சுகள் இட்ட வண்ணமிகு நூல்களிலால் ஆனா ஒரு படைப்பு அது.

inca-string

இன்று பல நாகரீகங்களில் கடைபிடிக்கப்படும், நம்பப்படும் ஒரு நிகழ்வான மறுபிறவியில் இம்மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருந்தனர்.

நிலஅதிர்வுகளை தாங்கும் அளவிற்கு மிக நேர்த்தியான கற்களாலான வீடுகளை வடிவமைப்பதில் வல்லவர்களாக திகழ்ந்தனர்.

3000 ஆண்டுகளுக்கு முன்பே வாய்க்கால்களை கொண்டு தங்களுக்கு தேவையான தானியங்களை விளைவித்தனர். இன்றும் பெரு நாட்டில் இன்று சில இடங்களில் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கால்வாய்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

inca-walls