தயாநிதி மாறன், கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித் துறை நோட்டீஸ், உயர்நீதிமன்றம் தள்ளுபடி

666

தயாநிதி மாறன், மற்றும் சவுத் ஆசியன் எப்.எம்.மின் பழைய வருமான வரிக் கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

2008 – 2009 மற்றும் 2009 – 2010 நிதியாண்டுகளுக்கான கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு எதிராக தயாநிதி மாறன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி, குடும்ப உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடையும் போது குடும்பத்தை சேர்ந்தவர் உயர்பதவியில் இருந்தால், அவர் செல்வாக்கை பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை விசாரணை நடைபெறுவதாகத் தெரிவித்தார்.

உயர் பதவிகளில் இருந்தவர்கள் அரசுத் துறைகள் நோட்டீஸ் அனுப்பும் தொடர்புடைய அதிகாரிகளை அணுகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, வருமான வரித்துறையின் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தார்.

Advertisement