செய்யாத்துரை இல்லத்தில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை.

500

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் இல்லத்தில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் SPK நிறுவனம் தமிழகத்தில் நெடுந்சாலை ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குநர்களாக செய்யாத்துறை அவரது மகன்களான நாகராஜன், கருப்பசாமி, ஈஸ்வரன், மற்றும் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். இந்நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரம் கோடி அளவிலான நெடுந்சாலை ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

இந்நிலையில், SPK நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் SPK நிறுவன அலுவலகங்கள் மற்றும் உரிமையாளர்கள் இல்லங்கள் வருமான வரித்துறையினர் கடந்த ஜூலை 16ந் தேதி முதல் 22ந் தேதி வரை சென்னை,மதுரை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடத்தி 183 கோடி ரூபாய் ரொக்கப்பணம் 105 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ் பி கே அலுவலகத்தில் உள்ள ஓர் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, SPK நிறுவன நிர்வாக இயக்குநர்களான செய்யாத்துரை அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜ், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் ஆகியோரிகளிடம் வீட்டில் கைப்பற்றபட்ட கோடிக்கணக்கான பணம், கிலோ கணக்கிலான தங்க நகைகள் கணக்கில் காட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.