பாதாள அறையா? அப்படியொன்று இல்லவே இல்லை – அடித்துச் சொல்லும் லீமா

685

பாதாள அறையுமில்லை… கட்டிலுக்கு அடியில எந்த பணமும் இல்லை.. கட்டுக்கட்டு பணம்னு சொல்றதெல்லாம் சுத்த பொய் என்று தொழிலதிபர் மார்ட்டின் மனைவி விளக்கம் அளித்துள்ளார்.

கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின். இவரது வீடு, ஆபீஸ் என 72 இடங்களில் போன வாரம் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் சிக்கிய பணம் குறித்து ஒவ்வொரு விதமாக செய்திகள் வெளியே வந்தன. ஆனால் இவ்வளவு பணம்தான் கைப்பற்றப்பட்டது என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் சொல்லவில்லை.

இந்நிலையில் வீட்டில் சிக்கிய பணம் குறித்து மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெளிவுபடுத்தி உள்ளதாவது:

“போன மாசம் 30ம் தேதி மதியம் 12.30 மணியில் இருந்து சோதனை எங்கள் வீடு, நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த 4ம் தேதி இரவு வரை அந்த சோதனை நடந்தது. கடந்த 30ம் தேதி எங்கள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனை நடந்தபோது, நானும் என் இளைய மகன் டைசனும் வீட்டில் இருந்தோம். சில ஊழியர்களும் வீட்டில் இருந்தார்கள். அப்போது எங்க வீட்டில 98 ஆயிரத்து 820 ரூபாயைதான் கைப்பற்றினார்கள். அதுவும் சட்டப்பூர்வ கைப்பற்றுதல் படிவமானது, வருமான வரித்துறையின் உதவி இயக்குநரால், முத்திரையிடப்பட்டு கையொப்பம் இடப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படி இருக்கும்போது, எங்க வீட்டில கட்டிலுக்கு அடியில, படிக்கட்டுல, பாதாள அறையில கட்டுக்கட்டாக பணம் எடுத்தாங்க என்று தொடர்ந்து தொலைக்காட்சிகளில் தவறான செய்தி ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

அப்படி ஒரு விஷயமே எங்க வீட்டில் நடக்கவில்லை. அப்படி ஒரு எந்த ஒரு அறையோ, கட்டிலோ மற்றும் படிக்கட்டுகளோ, எங்கள் வீட்டில் இல்லை. அந்த வீடியோவுக்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.