பாசனத்திற்காக திறக்கப்படும் கல்லணை நீரின் அளவு உயர்வு

179

கல்லணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால்,தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காவிரி பிரிவில் வினாடிக்கு 2,632 கன அடி வீதமும், வெண்ணாறு பிரிவில் 2333 கன அடி வீதமும், கல்லணை கால்வாயில் 1055 கன அடி கொள்ளிடத்தில்  3004 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து கல்லணைக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் கல்லணைக்கு வரும் நிலையில் கல்லணையிலிருந்து  மொத்தமாக வினாடிக்கு 9024 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து கல்லணையிலிருந்து மேலும் கூடுதல் தண்ணீர் மாலை முதல் திறக்க வாய்ப்புள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of