ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 132 எடுத்தது. ஆட்டத்தின் நடுவில் மழை பெய்யததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவுக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இறுதியாக 5 ஓவருக்கு 46 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இருந்தபோதும் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.

இந்தியா- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி 25-ம் தேதி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. இதில் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்கும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of