3-0 சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா | IND Vs NZ

951

கடந்த சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து சென்ற இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளை விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அபார வெற்றி பெற்றது. 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய இன்று நியூசிலாந்துடன் தனது மூன்றாவது ஆட்டத்தில் களமிறங்கியது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது, அதன்படி பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். முதல் ஐந்து ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது.

6-வது ஓவரை பென்னெட் வீசினார். இந்த ஓவரில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். இதனால் இந்தியா பவர்பிளே-யான முதல் 6 ஓவரில் 69 ரன்கள் குவித்தது. அத்துடன் ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 179 ரன்கள் எடுத்து 180 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கி ஆடிய நியூசிலாந்து அணியும் இருபது முடிவில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இதனை தொடர்ந்து ஆட்டத்தை விறுவிறுப்பாக்கியது சூப்பர் ஓவர். த்ரில்லிங்காக நடந்த இந்த சூப்பர் ஓவர் சுற்றில் சூப்பர் இந்திய அணி. இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை வெற்றி பெற்றது இந்திய அணி.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of