இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் நாளை தொடரும்

500

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 46.1 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 211 ரன்கள் சேர்த்திருந்தபோது மழை குறிக்கீட்டது. இதனால் ஆட்டம் பாதியில் தடைபட்டது.

இதுபோன்ற முக்கியமான போட்டிகளில் மழை குறிக்கீடு செய்து ஆட்டம் தடைபட்டால் வெற்றி தோல்வி முடிவை நிர்ணயம் செய்ய மாற்றுநாள் எனப்படும் ரிசர்வ் டே என்ற முறையை ஐசிசி அறிமுகப்படுத்தியது.

ஐசிசி-யின் ரிசர்வ் டே விதி கூறுவதாவது:-

உலகக்கோப்பை தொடரின் முக்கிய போட்டிகள் மழையால் தடைபட்டால் ரிசர்வ் டே என்ற முறைப்படி ஆட்டம் வேறொரு நாளுக்கு மாற்றப்படும். மேலும் போட்டி கைவிடப்பட்ட அதே மைதானத்திலேயே  ஆட்டத்தில் மீதம் இருக்கும் ஓவரில் இருந்து வீசப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐசிசி-யின் இந்த விதியின் மூலம் மழைகாரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி ஆட்டம்  ரிசர்வ் டே முறைப்படி மீண்டும் நாளை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.  .

Advertisement