சுதந்திர தின விழா: கண்காணிப்பு தீவிரம்

188

சுதந்திர தினத்தையொட்டி புதுச்சேரியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை எச்சரித்ததை தொடர்ந்து சுதந்திர தினத்தையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

சுதந்திர தின விழா நடக்கும் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம்  போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.  புதுச்சேரி கடலோர காவல்படை போலீசார் கடற்பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலில் இருந்து மீன்பிடித்து திரும்பும் படகுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால்எஸ்.பி.  உத்தரவின் பேரில் கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய கடலோர போலீசார் கடலில் மீன்பிடித்து வரும் விசைப்படகுகள் மற்றும் வெளி மாநிலத்திலிருந்து தொழிலுக்கு செல்லும் விசைப்படகுளை சோதனை மேற்கொண்டனர்.

மேலும் நகர இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் புதிய பேருந்து நிலையம், தங்கும்விடுதி, சுதந்திர தின விழா நடைபெறும் மைதானம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுப்பட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of