காற்று மாசு : உலக அளவில் ஏற்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் | Air pollution

1018

இந்தியாவில் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக ஒரு லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகள் இறந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

காற்று மாசு காரணமாக கடந்த ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், ஆப்பிரிக்காவின் சகாரா பகுதிகள் மற்றும் தெற்கு ஆசியப்பகுதிகள் காற்று மாசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் 60 லட்சத்து 70 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு காற்று மாசு காரணமாக இறந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மட்டும் 4 லட்சத்து 70 ஆயிரம் குழந்தைகள், பிறந்த ஒரே மாதத்தில் காற்று மாசு காரணமாக இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 16 ஆயிரம் குழந்தைகளும், சகாரா பகுதியில் 2 லட்சத்து 36 ஆயிரம் குழந்தைகளும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்புக்கு, வீட்டில் சமையல் செய்யும் போது எழும் புகையும், முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement