ஆசிய கோப்பை நேற்றயை ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வெற்றி

885

துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் இறங்கிய வங்கதேச அணி வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

இதனால் அந்த அணி 49.1 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து173 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி 36.2 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லீக் சுற்றில் ஹாங்காங், பாகிஸ்தானை வென்ற இந்திய அணி நேற்று வங்கதேத்தை வீழ்த்தியதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertisement