பாகிஸ்தான் போர் தொடுக்குமா..? மில்லியன் டாலர் கேள்விக்கான நச் பதில்..!

1008

ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஆர்டிகள் 370 என்ற சட்டத்தின் மூலம் சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆர்டிகள் 370 என்ற சட்டத்தினை சமீபத்தில் மத்திய அரசு நீக்கி உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.

ஆனால் பாகிஸ்தான் மட்டும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் இந்தியாவிற்கும் – பாகிஸ்தானுக்கு இடையே போர் ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் தனியார் கல்லூரியின் போர்தந்திர துறை பேராசிரியரான நெடுஞ்செழியன் இதுகுறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“சர்வதேச எல்லைப் பிரச்னைகளைக் கொண்ட காஷ்மீரை, இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியளிக்காது.

அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியோர் இந்திய அரசுக்கு ஆதரவு தந்துள்ளன. நம்முடனான சந்தை, கடல் வழிக்காக சீனா எதிர்க்காது. அப்படியானால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான், கோபத்தில் இந்தியா மீது போர் தொடுக்குமா? என்று கேட்டால்….இல்லை!

பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் ராணுவ நிலை பலமற்றதாகவே இருக்கிறது. எனவே நம் நாட்டுக்கு நிச்சயமாக பாகிஸ்தானால் போர் அச்சுறுத்தல் இல்லை.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மில்லியன் டாலர் கேள்விக்கான பதிலை இவர் சிம்பிளாக சொல்லியுள்ளார். இவர் கூறிய கருத்து எந்த அளவிற்கு சாத்தியம் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.