1947 முதல் 2019 வரை… இந்தியா – ஆஸ்திரேலியா-வின் பாக்ஸிங் டே

600

1947  ஆண்டில் பிரிஸ்பேன் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கப்பட்ட இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போடியில் ஆஸ்திரேலியா தொடரில் 226 ரன்கள் வித்யாசத்தில் தனது முதல் வெற்றியை வரலாற்றில் பதிவு செய்தது. பின் அதே ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சமன் செய்தது இந்தியா. பின் 1948 ல் இரண்டு தொடரில் தனது வெற்றியை பதிவு செய்தது. அதன் பின் 9 வருடம் கழித்து நடந்த தொடரையும் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி.

பின் 1959-1960 தொடரில் இரண்டாவது போட்டியில் இந்தியா தனது முதல் தொடர் போட்டியை வென்றது. ஆனால் தொடரை கைவிட்டது.  அதன் பின் 1964 தொடரிலும் ஒரு போட்டி சமனிலும், ஒரு போட்டி வெற்றியையும் கண்டது.  பிறகு நடைபெற்ற 1967 -1968 தொடர், 1969 தொடர், 1977-1978 தொடர்  என்று அடுத்தடுத்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா தோல்வியை மட்டுமே தழுவியது. இதுவரை நடந்த 25 தொடர்களில் உள்ள போட்டிகளில் இந்தியா 28 போட்டிகளில் வென்றும் 26 போட்டிகளை சமனும் செய்துள்ளது ஆனால் ஒரு தொடரையும் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2018 – 2019 ல் நடைப்பெற்ற சிட்னி தொடரில் இந்தியா தனது முதல் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வெற்றிப்பெற்றுள்ளது. இந்த தொடரில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமன் செய்து உள்ளது.  இந்த தொடரை இந்தியா  2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த தொடரில் இந்தியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 622 ரன்கள் எடுத்த நிலையில் தனது இன்னிங்ஸை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. கடந்த 72 ஆண்டுகளில் தனது முதல் டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாடி வென்றுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு இந்தாண்டு என்ன ஆச்சு –

இந்த தொடரில் ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சி பேட்ஸ்மேன்களினால் தான் என்பது ஒரு காரணமாகும். இந்த தொடரில் ஒரு பேட்ஸ்மேன் கூட சதமடிக்கவில்லை. மற்றும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித் மற்றும் வார்னர் ஆகச்சிறந்த நபர்கள் இல்லாததும் , மற்ற சிறந்த ஆட்டக்காரர்களான ஃபிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் போன்றோரின் ஆட்டம் அவர்கள் கையில் இல்லாததும் ஒரு காரணமாகும்.  மற்றும் இந்திய அணியின் ஆட்டத்திற்கு இணையாக பந்துவீச்சாளர்கள் துணையில்லை என்பது உண்மை.

இந்தியாவின் சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் என்ன –

டெஸ்ட் போட்டி என்றாலே நினைவுக்கு வருவது ராகுல் டிராவிட் தான். தொடரில் எல்லா போட்டியிலும் பெரும்பாலும் ஆட்டமிழக்காமல் எதிரணியை திணரடிக்கும் வீரராக இருந்தவர். அதே போல இந்த தொடரில் புஜாரா தனது சிறப்பான ஆட்டத்தால் 3 சதங்களை எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

முதல் இன்னிங்சில் 443 ரன்கள் என்று மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எடுக்க முக்கிய காரணம் புஜாரா மற்றும் விராட் கோலி இணைதான். புஜாரா 106 ரன்களையும், இந்திய அணித்தலைவர் விராட் கோலி 82 ரன்களும் எடுத்தனர். இவருக்கு அவ்வப்போது பார்ட்னர்ஷிப்ல் கோலி, ரோகித் சிறப்பாக விளையாடினர். மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் அபாரமாக விளையாடி சதமடித்து இந்தியாவிற்கு வெற்றி பெற்று தந்துள்ளனர்.

மற்றும் பேட்ஸ்மேன்கள் மட்டுமல்லாமல்  தொடரில் பந்துவீச்சாளர்கள் பெரும் உதவியாக விளங்கினர். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் போன்ற சுழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி எதிரணியை கலங்கடிக்க வைத்தனர். இந்த தொடரில் ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் பூம்ரா ஆகியோர் தொடரில் அதிக அளவில் விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியை நிலைதடுமாற செய்தனர்.  பும்ரா 151 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டமிழந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆஸ்திரேலியாவிற்கு 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசிய பூம்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்த போட்டியில் அவர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பாக்ஸிங் டே வின் வரலாறு –

பாக்ஸிங் டே என்பது டெஸ்ட் போட்டியில் அதிக வரவேற்ப்பு கொண்டு ரசிகர்களை தன்பால் இழுக்கும் ஆட்ட தொடராக இருக்கும். அந்த வகையில் இந்தியா ஆஸ்திரேலியா என்ற மிகப் பெரிய அணியை  தேர்வு செய்து வைக்கப்பட்டது தான் இந்த பாக்ஸிங் டே போட்டி. இந்த பாக்ஸிங் டே போட்டியில் இதர அணிகளும் விளையாடி வருகிறது.

1985 இறுதியில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் விளையாடியது. அடிலெய்டில் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா டிரா செய்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கவாஸ்கர், வெங்கர்சர்க்கார், கபில்தேவ் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இந்த தொடரையும் இந்திய அணி கைவிட்டது.

பின் ஆறு ஆண்டுகள் கழித்து 1991-ல் மீண்டும் ஆஸ்திரேலியாவில் விளையாடியது இந்தியா.  பின் 1995 ல் நடைப்பெற்றது இதில் ஆஸ்திரேலியா 180 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பின் 2003 ல் கங்குலி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி  366 ரன்களே எடுத்தது. பதிலடியாக முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஆனால் ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் கங்குலி அணியை தோற்கடித்தது ஸ்டீவ் வாக் அணி.

2007 ல் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தரப்பில் டெண்டுல்கர் மட்டும் அரை சதமடித்தார். இதில் இந்தியா இருநூறு ரன்கள் கூட அடிக்கவில்லை. ஆஸ்திரேலியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி  விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி இதில்  11 ரன்கள் விராட் கோலி எடுத்தார். தோனியின் தலைமையிலானஅணி 122 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது 2014 ல் இந்தியா 174 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி டிரா ஆனது. இதுவே தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி ஆகும்.

அதன் பின் நடைபெற்ற பாக்ஸீங் டே போட்டி 2018-2019 ல் நடந்ததே. இதில் இந்தியா வெற்றியை பெற்றது.

www.sathiyam.tv

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of