டிசம்பர் 3-ல் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டி.. – களமிறங்கும் இந்தியா…!

2546

வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐபிஎல் தொடர், டி20 உலகக் கோப்பை, பல இருநாட்டுத் தொடர்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி டிசம்பர் 3 இல் பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா பங்கேற்கும் என்று 7news.com.au என்ற இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

அந்தச் செய்தியில் இந்திய அணி டிசம்பர் 3 இல் பிரிஸ்பேன், டிசம்பர் 11 அடிலெய்ட், டிசம்பர் 26 இல் மெல்பேர்ன், அதன் பின்பு சிட்னியில் ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும்.

அதில் ஒரு டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக பிங்க் பந்தில் நடைபெறும். இதற்கு இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஏற்கெனவே ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியாவில் கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த 5 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க வரும் இந்திய வீரர்கள் யாரும் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள் என்றும் இந்த டெஸ்ட் போட்டிகள் அனைத்தும் ரசிகர்களுடனே நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Advertisement