ஆஸ்திரேலியாவை திணற வைத்த புஜாரா

387
pujara beat

இன்று காலை சிட்னி மைதானத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகளுக்கான இறுதி டெஸ்ட் போட்டி தொடங்கியது.டாஸ் வென்று இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் களமிறங்கினர். ராகுல் 2 -வது ஓவரில்  9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின் களமிறங்கிய புஜாரா மயங்க் அகர்வாலுடன் பார்ட்னர்ஷிப்பில் ஈடுபட்டார்.பொறுமையாக விளையாடி 116 ரன்களை இந்த ஜோடி 116 ரன்கள் சேர்த்தது.

77 ரன்களில் ஆட்டமிழந்தார் மயங்க் அகர்வால். பின் புஜாராவின் நேர்த்தியான விளையாட்டிற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் தினறினர்.  அடுத்து விளையாடிய கேப்டன் கோலி 23 ரன்னிலும் துணைக் கேப்டன் ரஹானே 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் புஜாரா நிதானமாக விளையாடினார். பின் பவுண்டரி அடித்து டெஸ்ட் போட்டியில் தனது 18 -வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்தத் தொடரில் புஜாரா அடிக்கும் மூன்றாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.முதலாம் நாளின் இறுதியில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் எடுத்தது.

புஜாரா 130 ரன்களுடனும் விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்கமால் இருந்தனர். இந்தத் தொடரில் புஜாரா  458 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of