பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அபார வெற்றி

689

பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி இந்திய வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் அந்த அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் புவனேஷ்வர், ஜாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, 29 ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி எளிதில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ரோகித் சர்மா அரை சதமும், தவான் 46 ரன்களும் எடுத்தனர். இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Advertisement