“உலக கோப்பை ஹாக்கி 2018” – தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

447

ஒடிசாவில் நடைபெற்ற உலககோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது.

14-வது உலக கோப்பை ஆண்கள் ஹாக்கிப் போட்டி புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டரங்களில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்திய வீரர்களின் ஆட்டம் சிறப்பாக இருந்தது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் மந்தீப் சிங் முதல் கோல் அடித்தார். அவரை தொடர்ந்து அக்‌ஷ்தீப் சிங் 12வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

முதல் பாதியில் இந்தியா 2-0 என முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய வீரர்கள் அசத்தலாக விளையாடினர். இந்திய வீரர் சிம்ரன் ஜித் சிங் 43 மற்றும் 46- வது நிமிடத்தில் தலா ஒரு கோலும், லலித் உபாத்யாயா 45வது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர். இறுதியில், இந்திய அணி 5 – 0 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா, பெல்ஜியமுடன் டிசம்பர் 2ஆம் தேதி மோதுகிறது. இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ள ஆட்டத்தில் அர்ஜெண்டினா, ஸ்பெயினுடனும், நியூசிலாந்து, பிரான்சுடனும் மோதுகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of