இந்தியா – சீனா இடையே இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை

387

இந்தியா – சீனா எல்லைப் பிரச்சனை தொடர்பாக இரு நாடுகள் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களிடையே கடந்த 15ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் சூழ்நிலை நிலவி வருகிறது. அதேசமயம் பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இருநாட்டு ராணுவ கமாண்டர் அளவிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை கடந்த 22ஆம் தேதி நடைபெற்றது.

அந்த பேச்சுவார்த்தையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டதாக இரு நாடுகள் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இருநாடுகள் இடையே 3ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தை லடாக்கின் ஹூஷுல் பகுதியில் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of