இந்தியா – சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயார் – அதிபர் டிரம்ப்

242

எல்லைப் பிரச்சினையில் இந்தியா – சீனா ஆகிய இருநாடுகளுக்கும் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 4 மாதங்களாக சீன ராணுவம் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.இதனை, இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இதனால், இந்தியா – சீனா இடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்.

இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை மிகவும் மோசமாக உள்ளது என்றும் சீனா – இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் எல்லைப் பிரச்சினையில் உதவ தயாராக இருக்கிறோம் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, இருநாடுகளிடமும் இது குறித்து தொடர்ந்து பேசி வருவதாகவும் டிரம்ப் கூறினார்.