ரோஹித் சரவெடி…, நியூசி.,க்கு தோல்வியை பரிசலித்த இந்தியா

667

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் அதிரடியாக வெற்றியை கைபற்றினர். அதன் பின் தொடங்கிய டி20 தொடரில் முதல் ஆட்டத்திலேயே 80 ரன் வித்தியாசத்தில் படுமோசமாக வெற்றியை பரிகொடுத்தனர்.

முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை சரிசெய்ய ஒரு புறம் இந்திய அணிகடுமையாக பயிற்சியில் ஈடுபட்டனர், மறுபுறம் சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரை விழந்த நியூசிலாந்த் அணி டி20 தொடரையாவது கை பற்றியாக வேண்டும் என கடுமையாக பயிற்சியில் ஈடுபட்ட வந்தனர்.

இந்நிலையில், ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கிய இரண்டாவது டி20 போட்டி டாஸ் வென்ற நியூசிலாந்த் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் விளையாடத்தொடங்கினர்.

இதில் தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து வந்த டேரில் மிட்சல் 1, வில்லியம்சன் 20 அடுத்தடுத்து வெளியேறினர்.

ஆரம்பமே தடுமாற்றத்துடன் ஆரம்பித்த நியூசிலாந்த் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். பின்னர் களமிறங்கிய டெய்லர்- கிராண்ட்ஹோம் ஜோடி சேர்ந்து அதிரடியை காட்டத்தொடங்கினர்.

இதில் கிராண்ட்ஹோம் 50 ரன்களில் வெளியேறினார். ஆனால், ராஸ் டெய்லர் 42 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் குருணல் பாண்டியா 3, அகமது 2, புவனேஷ் குமார், ஹர்திக் பாண்டியா தலா 1 விக்கெட்டுகளை தன்வசமாக்கிக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீரர்கள் ஆரம்பம் முதலே நியூசிலாந்த் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கத்தொடங்கினர்.

ரோஹித் 50 ரன்னிலும், தவான் 30 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். பின் களமிறங்கிய விஜய் சங்கர், பண்ட் இவர்களும் அதிரடியை காட்டத்தொடங்கினர். இதில் டேரில் வீசிய ஸ்லோவர் பந்தை சிக்ஸர் அடிக்க முயன்ற விஜய் சங்கர் 14 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும் தல தோனி களத்தில் இறங்கி வெற்றி இலக்கை எளிதில் அடைய வழிசெய்தார். இறுதியில் இந்திய அணி 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 162 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை நியூசிலாந்த் அணிக்கு பரிசளித்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of