இந்தியாவில் பெருந்தொற்று தினசரி பாதிப்பு

646

இந்தியாவில் பெருந்தொற்று தினசரி பாதிப்பு இன்றும் சற்று உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 3.62 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3  லட்சத்து 62 ஆயிரத்து 727 பேர் பெருந்தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 37 லட்சத்து 03 ஆயிரத்து 665ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 4 ஆயிரத்து 120 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மொத்த உயிரிழப்பு 2 லட்சத்து 58 ஆரியத்து 317 ஆக உயர்ந்துள்ளது. 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 55ஆயிரத்து 338 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை1 கோடியே 97 லட்சத்து 34 ஆயிரத்து 823 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 37 லட்சத்து 10 ஆயிரத்து 525 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement