இந்தியாவுக்கு ஒரு குண்டு போதாது 50 குண்டுகள் தேவை.., முஷரப்

517

கடந்த சில நாட்களுக்கு முன்பு மனதை உலுக்கி போட்ட புல்வாமா தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதனை குறித்து சமீபத்தில் பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும் வரை உலகில் அமைதி நிலவ சாத்தியம் இல்லை என்றார்.

நமது எல்லையில் பாதுகாப்பில் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள், மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம் என பாகிஸ்தானுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் துபாயில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்குமா? இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் அணு ஆயுதங்களை பயன்படுத்துமா? என்ற செய்தியாளர்களுக்கு பதிலளித்த முஷரப், ‘இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடியாக 20 அணுகுண்டுகளை வீசி ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானையே இந்தியா அழித்துவிடும்.

எனவே, அணு ஆயுதப்போர் என்ற நிலை ஏற்பட்டால் இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீசி அவர்கள் எதிர் தாக்குதல் நடத்த முடியாதவாறு நாம் முதல் தாக்குதலை நடத்த வேண்டும். 50 அணுகுண்டுகளை வீசி முதல் தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தயாரா?’ என எதிர்கேள்வி எழுப்பினார்.

1999-ம் ஆண்டில் இருந்து 2008-ம் ஆண்டுவரை பாகிஸ்தான் அதிபராக பதவிவகித்த பர்வேஸ் முஷரப், அதற்கு முன்னர் 1999-ம் ஆண்டில் இந்தியா நடத்திய கார்கில் போர் காலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தளபதியாக இருந்து போரை எதிர்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of