இன்று தொடங்குகிறது இந்தியா – இங்கிலாந்து மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி

187

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3 வது போட்டி இன்று பிப்ரவரி அகமதாபாத்தில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இப்போட்டி பகலிரவு ஆட்டமாக நடக்கவிருக்கிறது. ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், முன்னிலை பெறுவதில் இரு அணிகளும் தீவிரம் காட்டுவார்கள்.

இரண்டாவது போட்டியில் விளையாடாத இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா இந்த போட்டியில் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்திய அணிக்கு மேலும் வலு சேர்க்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பகலிரவு ஆட்டமாக இருப்பதால் ரசிகர்கள் போட்டியைக்காண ஆர்வம்.

Advertisement