இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

1044

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய அணி, 3வது போட்டியில் மீண்டெழுந்து வெற்றி பெற்றது.

மீண்டும் 4வது போட்டியில் சொதப்பிய இந்திய அணி, போட்டியில் தோல்வி அடைந்ததுடன், தொடரையும் இழந்தது. இந்நிலையில் இரு அணிகள் மோதும் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மாலை தொடங்குகிறது.

இந்த போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெறமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேசமயம் இந்த போட்டியுடன் இங்கிலாந்து வீரர் குக் ஓய்வு பெறுவதால், அவரை வெற்றியுடன் வழியனுப்ப இங்கிலாந்து வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

Advertisement