இந்திய அணிக்கு டஃப் கொடுக்கும் இங்கிலாந்து – வெற்றி வாகை சூடுமா இந்தியா?

792

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தநிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும் அரை சதம் கண்டார்.

ஸ்டோக்ஸ் கடைசி ஓவரில் ஃபிளிக் ஷாட் ஆடி கேட்ச் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்தார். அவர் மூன்று சிக்ஸர்கள் ஆறு பௌண்டரிகள் உதவியுடன் 54 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி கடைசி 10 ஓவர்களில் 92 ரன்கள் குவித்தது.

50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி ஏழு விக்கெட்டுகள் இழப்புக்கு 337 ரன்கள் குவித்தது. ஜாஸ் பட்லர் 47-வது ஓவரில் ஷமி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார். அவர் எட்டு பந்துகளில் 20 ரன்கள் குவித்தார்.

அவருக்குப் பின் களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ் ஐந்து பந்துகளில் ஏழு ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். பும்ரா சிறப்பாக பந்துவீசினார். குறிப்பாக கடைசி ஓவரில் மூன்று ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றினார். அவர் 10 ஓவர்கள் வீசி 44 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார்.

ஷமியின் கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரிகள் ஒரு சிக்ஸர்கள் உள்பட 14 ரன்கள் குவித்தார் ஸ்டோக்ஸ். பத்து ஓவர்கள் வீசிய ஷமி ஒரு மெய்டன் வீசி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆனால் 69 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

யுவேந்திர சாஹல் 10 ஓவர்கள் வீசி 88 ரன்கள் விட்டுக்கொடுத்தார். குல்தீப் யாதவும் 72 ரன்கள் கொடுத்தார். இவ்விரு சுழற்பந்து வீச்சாளர்கள் மட்டும் 20 ஓவர்களில் 160 ரன்கள்கொடுத்தனர்.

ஜேசன் ராய் மற்றும் பென் ஸ்டோக்ஸ் என இருவரை கேட்ச் பிடித்து வெளியேற்றினார் ரவீந்திர ஜடேஜா.

இந்திய அணி எட்டு ரன்களை மட்டுமே உதிரியாக கொடுத்தது. ”ஜேசன் ராய், பேர்ஸ்டோ அபாயகரமான இணை. அவர்கள் உலகின் எந்த ஆட்டக்களத்திலும் எந்த நேரத்திலும் சிறப்பாக விளையாடும் திறன் கொண்டவர்கள். அதுதான் இந்த போட்டியிலும் நடந்தது” என்கிறார் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்.

இந்திய அணி கடைசியாக இங்கிலாந்து அணியுடன் 2011 உலகக் கோப்பையில் விளையாடியது. அப்போது முதலில் பேட்டிங் பிடித்த இந்திய அணி 338 ரன்கள் எடுத்தது. சச்சின் சதமடித்திருந்தார். அந்த போட்டி டையில் முடிந்தது.

தற்போது இந்திய அணிக்கு 338 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

Advertisement