“எனக்கு மிகவும் பிடித்த இடம் சேப்பாக்கம் மைதானம்”- அனுபவத்தை பகிரும் கபில்தேவ்..!

185

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றது இதனை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள 83 திரைப்படம் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் , முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் 83 திரைப்படத்தில் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலி வுட் நடிகர் ரன்வீர் சிங், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் நடிக்கும் நடிகர் ஜீவா ( தமிழ் ), இத்திரைப்படத்தின் இயக்குனர் கபிர் கான் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர்.

இயக்குனர் கபீர் கான் பேச்சு :

முதல் உலககோப்பையை வென்ற போதே திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதிலேயே கனவாக இருந்த தருணம் இன்று நிறைவேறியுள்ளது,மிகவும் பெருமையாக உள்ளது.மிகவும் ஸ்வாரசியமாக இருந்தது .

இந்த திரைபடம் எடுக்கும் போது உன்மையாக சவலாக தான் இருந்தது,ஆனால் இந்த அளவிற்கு நன்றாக அமைந்தமைக்கு காரணம் 1983 உலக கோப்பையை வென்ற நம் இந்திய அணி வீரர்களின் ஆசீர்வாதம் தான் என்று தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேச்சு:

ஒரு கிரிக்கெட் வீரராக மிகவும் பிடித்த இடம் சென்னை சேப்பாக்கம் மைதானம் தான் நான் விளையாடிய பொழுதை விட தற்போது மிகவும் அழகாக உள்ளது சேப்பாக்கம் மைதானம். தற்போது உள்ள தலைமுறைகள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள் என தெரிவித்தார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பேச்சு :

1983ஆம் ஆண்டின் உலககோப்பைக்கான இந்திய அணியில் இருந்தது மிகவும் பெருமிதமாக இருந்தது.கபில் தேவிற்கு மிகவும் பிடித்த மைதானம் சேப்பாக்கம் தான். கபில் தேவ் போன்ற ஒரு வீரர் யாருமே இல்லை போட்டி தொடங்கிய முதல் நாளில் இருந்து கோப்பையை வெல்லும் வரை மனவலிமையோடு விளையாடியவர். என தெரிவித்தார்.

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பேச்சு :

இதுவரை இல்லாத அளவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாக 83 இருக்கும்.நாங்கள் அனைவரும் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்துள்ளோம்.

மிகவும் பெருமையாக உள்ளது.முதல் உலககோப்பையை வென்றது எவராலும் மறக்க முடியாத ஒன்றாகும். கபில் தேவ் போல் பந்து வீசுவது எவராலும் முடியாத ஒன்றாகும்.அவரை போல் பந்து வீச அவரால் மட்டும் தான் முடியும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of