சீனாவை விட இருமடங்கு வேகத்தில் வளரும் இந்தியா ? – ஐ.நா. சபையின் அறிக்கை

561

உலகத்தில் ஜனத்தொகை அதிகம் உள்ள நாடு சீனா, அதற்கு அடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்நிலையில் மக்கள் தொகை பெருக்கம் தொடர்பான ஐ.நா. சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அந்த அறிக்கையின்படி 1969-ம் ஆண்டு, இந்தியாவின் மக்கள் தொகை 541.5 மில்லியனாக இருந்தது.

1994-ல் இது, 942.2 மில்லியனாக அதிகரித்தது. தற்போது 2019ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 136 கோடி ஆகும்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது

சீனாவை பொறுத்தவரை தற்போதைய மக்கள் தொகை 142 கோடி. 1994-ல் இது 123 கோடியாக இருந்தது. 1969-ல் 803.6 மில்லியனாக இருந்தது.

சீனாவை பொறுத்தவரை கடந்த 9 ஆண்டுகளில் அதன் மக்கள் தொகை ஆண்டுக்கு 0.5 சதவீதம் என்ற அளவுக்குத்தான் வளர்ந்துள்ளது, ஆக சீனாவை விட இரு மடங்கு அதிகமான வேகத்தில் இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக வளர்ந்து வருகிறது.