இந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது – ராகுல்

298

ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பொதுகூட்டத்தில் பேசிய காஸ்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி: காங்கிரஸ் ஆட்சியின் போது இந்தியா 9 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

இதனை மற்ற நாடுகள் உற்று நோக்கியது. தற்போது மத்திய அரசிடம் பல்வேறு அளவீடுகள் உள்ளது. பழைய அளவீடுகளை பயன்படுத்தினால் இந்தியா 2.5 சதவீதமாக தன வளர்ந்துள்ளது.

பொளாதாரம் பற்றி மோடி படிக்கவில்லை புரிந்துகொள்ளவும் இல்லை. ஜிஎஸ்டி என்றால் என்ன என்பது கூட மோடிக்கு தெரியாது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை தீங்கு விளைப்பது என்று 8 வயது குழந்தைக்கு கூட தெரியும்.

அப்போது இந்தியாவின் அடையாளமாக சகோதரத்துவம் இருந்தது அதனை மோடி அழித்துவிட்டார். இந்தியா கற்பழிப்பு தலைநகரமாக மாறிவிட்டது. இது குறித்து மோடி ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.

2கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளித்தார். ஆனால் கடந்த ஆண்டு 1கோடி இளைஞர்கள் வேலைகளை இழந்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் பல்கலைகழகத்திற்க்கு சென்று அவர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியுமா..? என மோடிக்கு சவால் விடுகிறேன் அவரல் முடியாது தவறான வாக்குறுதிகளை மட்டுமே அளிப்பார். இவ்வாறு ராகுல் பேசினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of