இந்தியா தான் காரணம்.. அபாண்டமாக பழிபோடும் அமெரிக்கா..

7366

நவம்பர் மாதம் அமெரிக்கா அதிபர் தேர்தல் நடைபெற இருப்பதால், ஜோ பிடனும், டெனால்ட் டிரம்பும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று கிளீவ்லேன்ட் என்ற இடத்தில், இரு வேட்பாளர்களும் சுமார் 90 நிமிடங்களுக்கு பரபரப்பு விவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய ஜோ பிடன், மற்ற அனைத்து நாடுகளையும் விட அமெரிக்காவில் தான் பெருந்தொற்று பாதிப்பு உள்ளது என்று குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய டிரம்ப், இந்தியா, சீனா போன்ற நாடுகள், உண்மையான பாதிப்பு நிலவரங்களை வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து, புவி வெப்பமயமாதலுக்கு 15 சதவீதத்திற்கு அமெரிக்காவே பொறுப்பு என ஜோ பிடன் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கும் பதில் அளித்த டிரம்ப், புவி வெப்பமயமாதலுக்கு அமெரிக்காவை விட இந்தியா தான் காரணம் என்றும், சீனா மாசுக்களை காற்றில் பறக்க விடுகிறது என்றும் தெரிவித்தார்.

இந்தியாவை நட்பு நாடு என்று முன்னர் கூறி வந்த டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்திற்காக தற்போது பழிபோட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.