உலகிலேயே அதிக புலிகள் வசிக்கும் பாதுகாப்பான நாடு இந்தியா – மோடி பெருமிதம்

308

சர்வதேச புலிகள் தினமான இன்று இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, சரணாலயங்களின் தர மதிப்பீடு ஆகிய தகவல்கள் கொண்ட அறிக்கையை பிரதமர் மோடி இன்று வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், இந்தியாவில் மொத்தம் 2,967 புலிகள் இருப்பதாக 2018ம் ஆண்டு கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது என்றும், மேலும் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் மோடி தெரிவித்தார்.

உலகளாவிய புலி தினத்தன்று அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பின் 4வது சுழற்சியின் முடிவுகளை வெளியிட்ட மோடி, அரசாங்கம் ஒரு ‘வரலாற்று சாதனையை’ அடைந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும், புலிகளை காப்பாற்றுவதில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது எனவும் கூறினார்.

2014ம் ஆண்டில் 2,226 புலிகள் இருந்த நிலையில் தற்போது புலிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.