உலகின் மிக வலுவான நீதித்துறை கொண்ட நாடு இந்தியா: தீபக் மிஸ்ரா

852

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, சிக்கலான வழக்குகளை கையாளும் அளவுக்கு இந்திய நீதித்துறை சக்தி வாய்ந்ததாக இருப்பதாக தெரிவித்தார்.
வரலாறு சில நேரங்களில் கருணை மிகுந்ததாகவும், சில நேரங்களில் கருணையற்றதாகவும் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டார். ஆனால் தான் யாரையும் வரலாற்றை வைத்து நிர்ணயிப்பது இல்லை என்றும், அவர்களின் நடத்தையை கொண்டே முடிவு செய்வதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பேசிய நீதிபதி ரஞ்சன் கோகாய், நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்கும் அளவுக்கு அரசியல் அமைப்புச் சட்டம் வலிமை வாய்ந்தது என்றார். தீபக் மிஸ்ரா தொலை நோக்கு பார்வை கொண்டவர் என்றும் பாராட்டு தெரிவித்தார்.

Advertisement