ஜப்பானிடம் இருந்து 75 பில்லியன் டாலர் வாங்கும் இந்தியா!

466

கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பிரதமர் மோடி மேற்கொண்ட ஜப்பான் பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையே “இருதரப்பு பணப் பரிவர்த்தனை ஒப்பந்தம்” குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதையடுதத்து ரிசர்வ் வங்கி மற்றும் ஜப்பான் வங்கி இடையே இந்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.அதன்மூலம், இந்திய ரிசர்வ் வங்கி ஜப்பான் வங்கியிடம் இந்திய ரூபாயை அளித்து 75 பில்லியன் டாலர் அளவிற்கு பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்னர் 50 பில்லியன் டாலர் வரை பெற்றுவந்தது.

இதுகுறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிலுவைத் தொகையைச் சமன்செய்வது அல்லது குறுகிய கால பணப்புழக்கத்திற்கு இந்த 75 பில்லியன் டாலர் உதவும்.

இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஜப்பானுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதன்மூலம், இருநாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of