ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் தகுதி சுற்று – இந்தியா அதிர்ச்சி தோல்வி

756

இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் விளையாட்டிற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் ஹாக்கி, கபடி, டேபிள் டென்னிஸ் போன்ற பல விளையாட்டுகளுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுப்பதில்லை என்றும் பரவலாக ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய டேபிள் டென்னிஸ் அணிக்கான தகுதி சுற்று போட்டி போர்ச்சுகல் நாட்டில் உள்ள கோன்டோமர் என்ற நகரில் நடந்து வருகிறது.

இந்த தகுதி போட்டி ஆட்டங்களில் நேற்று ஆண்கள் பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 1-3 என்ற கணக்கில் சுலோவேனியாவிடம் தோல்வி அடைந்தது. இரட்டையர் ஆட்டங்களில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், அதன் பிறகு நடந்த ஒற்றையர் ஆட்டத்தில் பங்கேற்ற சத்யன், சரத்கமல், ஹர்மீத் தேசாய் ஆகிய வீரர்கள் வரிசையாக தோற்று ஏமாற்றம் அளித்தனர். பெண்கள் பிரிவின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் ருமேனியாவிடம் போராடி தோற்றது.

Advertisement