உலக கோப்பை குத்துச்சண்டை : 6 வது முறையாக தங்கம் வென்று மேரிகோம் புதிய சாதனை

317

10வது உலக மகளிர் குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது, இதன் இறுதி போட்டி இன்று நடைபெற்றது. 48 கிலோ லைட் Flyweight பிரிவில் இந்திய வீராங்கனை மேரி கோம், உக்ரைன் வீராங்கனை ஹன்னாவுடன் மோதினார்.

mary kom

ஆட்டம் முதலே ஆக்ரோஷமாக விளையாடிய மேரி கோம், எதிரணி வீரரை திணறடிக்க வைத்தார். இறுதியில் உக்ரைன் வீராங்கனையை வீழ்த்தி மேரி கோம் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். உலக மகளிர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்பில் 6 முறை தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள மேரி கோம், புதிய வரலாற்று சாதனையை படைத்தார்.