‘பி.டபிள்யூ.சி’ சர்வதேச முகவாண்மை நிறுவனம் உலக பணக்கார நாடுகள் பட்டியலை வெளியிட்டது

435

சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது.

உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.

அதன்படி நடப்பு 2019-ம் ஆண்டில் இந்தியா 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு 7-வது இடத்தில் இருந்த இந்தியா இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்த இடத்துக்கு முன்னேறியுள்ளது

சர்வதேச முகவாண்மை நிறுவனமான ‘பி.டபிள்யூ.சி.’ உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த பட்டியலை வெளியிட்டது.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம். அதனால் மக்களின் உழைப்பு காரணமாக உற்பத்தி திறன் அதிகரித்து பொருளாதார நிலை உயர்ந்துள்ளதாக பி.டபிள்யூ.சி. தெரிவித்துள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றத்துடன் அமெரிக்கா பணக்கார நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சீனா 2-வது இடத்திலும், ஜப்பான், ஜெர்மனி தலா 3 மற்றும் 4-வது இடத்தில் உள்ளன.

இந்த வளர்ச்சி நிரந்தரமாக இருக்கும் என்றும் ‘பி.டபிள்யூ.சி.’ நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of