அதிகரிக்கும் “Me Too” புகார்கள்

909

பாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவித்துள்ள அனைத்து பெண்களுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவிக்கும் “Me Too” புகார்கள் அதிகரித்துள்ளது.

சினிமா, விளையாட்டு, அரசியல் என அனைத்து துறையில் உள்ளவர்கள் மீதும் பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பணிக்கு செல்லும் மகளிருக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மிகவும் கண்டனத்திற்கு உரியது என்று தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் புகார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், குற்றச்சாட்டுகளுக்கு அக்பர் தான் பதில் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும் பாலியல் புகார் தெரிவித்த அனைத்து பெண்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Advertisement