இலக்கை நிர்ணயித்த ஆஸ்திரேலியா.., இதனை சமாளிக்குமா கோலி&கோ

293

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டெல்லி பெரோஸா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரான் பின்ச் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்டன் ஆரான் பின்ச் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 76 ரன்களை சேர்த்த நிலையில், பின்ச் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின்னர், மூன்றாவது வீரராக களமிறங்கிய ஹேண்ட்ஸ்கோம்ப் உடன் ஜோடி சேர்ந்த கவாஜா, நேர்த்தியான பேட்டிங்கை வெளிபடுத்தி தனது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் சதத்தை அடித்தார்.

106 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்களை விளாசி செட் பேட்ஸ்மேனாக இருந்த கவாஜா 33வது ஓவரில் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த மேக்ஸ்வேல் ஒரு ரன்னோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

மறுமுனையில், நிலைத்து ஆடிய ஹண்ட்ஸ்கோம்ப் 52 ரன்னில் ஆட்டமிழந்தார். முன்னதாக நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்த டர்னர் இந்தப் போட்டியில் 20 ரன்களில் நடையைக் கட்டினார். பின்னர் ஸ்டாய்னிஸ் (20), அலெக்ஸ் கெரி (3) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதனால், 300க்கும் மேற்பட்ட ரன்களை குவிக்க இருந்த ஆஸ்திரேலிய அணி 45.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்திருந்து. இந்த இக்கெட்டாண தருணத்தில் ஜோடி சேர்ந்த பெட் கம்மின்ஸ் மற்றும் ரிச்சர்டுசன் ஆகியோர் இறுதிக் கட்ட ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.

குறிப்பாக, பும்ரா வீசிய 48வது ஓவரில் மட்டும் ரிச்சர்டுசன் மூன்று பவுண்டரிகளையும், கம்மின்ஸ் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி என 19 ரன்களை எடுத்தனர். கம்மின்ஸ் 8 பந்துகளில் இரண்டு பவுண்டரிகள் என 15 ரன்களிலும், ரிச்சர்டுசன் 21 பந்துகளில் மூன்று பவுண்டரிகளுடன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் (3), முகமது ஷமி (2) ரவிந்திர ஜடேஜா (2) விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பெரோஸா கோட்லா மைதானத்தில் 250க்கும் மேற்பட்ட ரன்களை இலங்கை அணிதான் இறுதியாக 1996 உலகக் கோப்பை தொடரின் போது சேஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய அணி 273 ரன்களை சேஸ் செய்யும் பட்சத்தில் தொடரில் வெற்றிபெறுவது மட்டுமின்றி, புதிய சாதனை படைக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடங்க வீரர்களான தவான், ரோகித் ஆரம்பம் முதலே முழுகவனத்துடன் விளையாடி வருகின்றனர். எதிரணியும் இவர்களை வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணி 4 ஓவர் முடிவிற்கு விக்கெட் எதுவும் இன்றி 15 ரன்களை எடுத்து களத்தில் விளையாடி வருகின்றன.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of