ஆஸ்திரேலியாவின் சரவெடி.., இந்தியா தருமா பதிலடி?

376

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது. முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்ற நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்களான பின்ச்-கவாஜா இணை இந்திய அணியின் பந்துவீச்சை ஆரம்பத்திலிருந்தே அடித்து நொறுக்கினர்.

குறிப்பாக இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ், ஜாதவ் ஆகிய இருவரின் பந்துகள் பவுண்டரி லைன்களுக்கு திரும்பத் திரும்ப விரட்டப்பட்டன. இந்த இணையை பிரிக்க இந்திய வீரர்கள் எடுத்த அனைத்து முயற்சிகளும் தவிடுபொடியாகின.குறிப்பாக இத்தனை நாட்களாக பார்ம் இன்றி தவித்து வந்த கேப்டன் பின்ச், கடந்த 22 இன்னிங்ஸில் தன்னுடைய முதல் அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

பின்னர் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்ட இவர், இறுதியாக குல்தீப் யாதவ் வீசிய 32 ஓவரில் 99 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். தொடக்க வீரர்கள் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்தனர். மற்றொரு தொடக்க வீரர் கவாஜா ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்து விளையாடிவருகிறார்.

இவர்களை தொடர்ந்து மேக்ஸ்வெல் ஆரம்ப வீரர்களை போலவே அதிரடியை காட்ட தொங்கினார். இவரும் 31 பந்துகளில் 47 ரன்களை எடுத்து தல தோனியிடம் ரன் அவுட் ஆனார். இவரைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொர்ப்ப ரன்களில் வெளியேறினர்.

இறுதியாக 50 ஓவர் முடிவிற்கு 5 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்களை எடுத்தனர். பின்பு 314 ரன்னை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயத்தது. ரஞ்சி மைதானத்தில் இதுவே மிகப்பெரிய வெற்றி இலக்கு ஆகும். கடந்த ஆட்டத்தை போல பல சோதனைகளை படைக்குமா இந்திய அணி என பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுட்டுள்ளது.

தல தோனி கடந்த ஆட்டத்தில் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். அது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் தோனி தன் சொந்த ஊரில் தன் அதிரடியை எப்போதும் ரசிகர்களுக்கு காட்டி வருவது வழக்கும் அதுமாதிரி இந்த ஆட்டமும் நடக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of