வெங்காயம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் – ஏற்றுமதிக்கு தடை

211

அனைத்து வகையான வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் அதிக அளவில் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் வெங்காயம் விலை அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை கிடுகிடுவென உயர்வது வழக்கம்.

தற்போது வெங்காயம் நாடு முழுவதும் ஒரு கிலோ சுமார் 45 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரும் பண்டிகைக் காலத்தில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கக்கூடிய நிலையில், வரத்து குறைவால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமுள்ளது. அதைத் தடுக்கும் வகையில் அனைத்து ரக வெங்காயம் ஏற்றுமதிக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், உள்நாட்டு சந்தைகளில் வெங்காயம் வரத்து அதிகரித்து விலை உயராமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of