பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

922

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்

பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிர்மலா சீதாராமன், தலைநகர் பாரீசில் உள்ள ஆய்வு நிறுவனம் ஒன்றில் நடந்த நிகழ்வில் பங்கேற்று பேசினார்.
அப்போது இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து விளக்கினார்.

பாகிஸ்தான் பயங்கரவாத கட்டமைப்புகளும், அரசு ஆதரவு பயங்கரவாதிகளும் இந்தியாவின் பொறுமையை தொடர்ந்து சோதித்து வருவதாக கூறினார்.

கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய ராணுவம் மேற்கொண்ட துல்லிய தாக்குதல் மூலம், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தி இருக்கிறோம் என்றும் இது மேலும் தொடரும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement