22 சீட் கன்ஃபார்ம் – இராணுவத் தாக்குதலை வைத்து அரசியல் செய்யும் எடியூரப்பா

747

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தால் நாடெங்கும் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா? என்பது போல இந்த தாக்குதலை வைத்து பாஜக அரசியல் செய்யத் துவங்கியுள்ளது.

இந்தியா நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் நாடு முழுவதும் பிரதமர் மோடிக்கு செல்வாக்கு அதிகரித்துவிட்டதாகவும், அலை வீசி வருவதாகவும் கர்நாடகத்தில் 22 எம்பி சீட் கிடைக்கும் என்றும் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான எடியூரப்பா பேசியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புல்வாமா தாக்குதலை பாஜக அரசியலாக்குகிறது என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர் அதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் கர்நாடக பாஜக தலைவரின் பேச்சு அமைந்துள்ளது.

விமான படை தாக்குதலால் நாடு முழுவதும் மோடி அலை வீசுவதாக கர்நாடக பாஜக மாநில தலைவர் எடியூரப்பா சொல்லி இருக்கிறார்.

புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 இந்திய வீரர்கள் உயிரிழந்துவிட்டனர். இது சம்பந்தமான எதிர்தாக்குதலை இந்தியா நடத்த, அதற்கு பதிலுக்கு பாகிஸ்தான் இந்திய எல்லையில் களமிறங்க, நேற்று இரு நாடுகளுமே பதற்றமாகி போர் மூளும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.

இந்த நிலையில் கர்நாடக மாநில பாஜக தலைவர் எடியூரப்பா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் சொன்னதாவது: “பாலகோட் (பாகிஸ்தான்) பகுதியில், இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலால் கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 22 தொகுதிகள் பாஜகவுக்கு கிடைக்கும்.

பாலகோட் தாக்குதலால் நாடு முழுவதும் மோடிக்கு ஆதரவான அலையே வீசுகிறது. இது மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும். மீண்டும் மோடி பிரதமராக வெற்றி பெற இது வழிவகுக்கும்” என்றார்.

இந்திய விமானி ஒருவரை பாகிஸ்தான் கைது செய்துள்ள நிலையில், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்றே புரியாமல், இந்த நேரத்திலும் பாஜக தலைவர்கள் லோக்சபா தேர்தலில் ஜெயிக்க அதை வைத்து ஓட்டு அரசியல் செய்யும் போக்கு பொதுமக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of