ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா

377
Fighter-plane-india

ரஷ்யாவிடம் போர் விமானம் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ள இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆள் இல்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷ்யாவின் எஸ் 400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சூழலில்,சீன பாதுகாப்பு நிறுவனம் ஒன்று ரஷியாவிடம் இருந்து சுகோய் ரக போர் விமானங்களையும், எஸ்-400 ரக ஏவுகணைகளையும் கொள்முதல் செய்த விவகாரத்தில், எதிரி நாடுகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த நிறுவனத்தின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

இது, ரஷியாவிடமிருந்து எஸ்-400 ரக போர் விமானங்களைக் கொள்முதல் செய்யவுள்ள இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆனால், அண்மையில் அமெரிக்க-இந்திய நாடுகளின் அமைச்சர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ், இந்தப் பொருளாதாரத் தடை முற்றிலும் ரஷியாவுக்கானது.

இந்தியா போன்ற நட்பு நாடுகளை இந்தப் பொருளாதாரத் தடை பாதிக்காத வகையில் அமெரிக்காவின் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.

ஏற்கனவே அமெரிக்காவின் மிரட்டலுக்கு பணிந்து ஈரானிடம் இருந்து பெட்ரோல் கொள்முதலை இந்தியா குறைத்துள்ள நிலையில், அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here