சிறப்பான ஆட்டம் ! தென் ஆப்பிரிக்காவை வென்றது இந்தியா | SA vs IND

737

இந்தியா – தென்ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து தென்ஆப்பிரிக்கா அணியின் ஹென்ரிக்ஸ், டி காக் ஆகியோர் களம் இறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் ஹென்ரிக்ஸ் 6 ரன்னில் அவுட்டாக அடுத்து பவுமா களமிறங்கினார். டி காக்குடன் இணைந்து ஆடினார். டி காக் அரை சதமடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார். பவுமா 49 ரன்னில் அவுட்டாகி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா. இறுதியில், இந்தியா 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of